• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- இலங்கையின் பொருளாதார நிலைமை, இலங்கை மத்திய வங்கியின் நிலைமை உட்பட உரிய ஆண்டினுள் பின்பற்றப்பட்ட நிதிக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை உள்ளடக்கி நிதிச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபையினால் இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையானது தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கைக்கு அமைவாக சாதகமற்ற காலநிலைமை மற்றும் அதனால் ஏற்பட்ட ஏனைய தாக்கங்களின் மத்தியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 2017 ஆம் ஆண்டில் 3.1 சதவீதம் வரை குறைந்திருந்த போதிலும், தொழிலற்றோரின் விகிதாசாரமானது 4.2 சதவீதம் வரை மேலும் குறைவடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 2.1 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொடுப்பனவு நிலுவையில் மொத்த மிகையினைப் பதிவு செய்வதற்கு இலங்கை வெற்றி கண்டுள்ளதோடு, தேறிய உத்தியோகபூர்வ வௌிநாட்டு ஒதுக்கமானது 8 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலாக அதிகரித்துள்ளது. தேறிய உள்நாட்டு உற்பத்தியின் சராசரியாக அரசாங்கத்தின் வரி வருமானம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்க வெற்றியொன்றாகும். 2017 ஆம் ஆண்டில் நாட்டின் தனியாள் வருமானம் 4.065 ஐக்கிய அமெரிக்க டொலர் மட்டத்தினை அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்தி சவால்களை வெற்றி காண்பதில் தொலைநோக்குடனும் பொதுமக்களின் மேம்பாட்டினை குறியிலக்காகக் கொண்டும் கொள்கைகளை வகுத்தல் மற்றும் மறுசீரமைப்புகளை நிலைபேறாக நடைமுறைப்படுத்துதல் என்பவற்றின் முக்கியத்துவம் இலங்கை மத்திய வங்கியின் 2017 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின் மூலம் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதோடு, இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.