• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் அதிகார எல்லையினுள் கடற்பிரதேசத்திற்கான வரைபடத்தை தயாரிப்பதற்கு தேவையான Hydrographic அளவை நடவடிக்கைகளைச் செய்வதற்கு Multi Beam Echo Sounder ஒன்றை கொள்வனவு செய்தல்
- இலங்கையில் கடற்பிரதேசத்திற்கான வரைப்படத்தை தயாரித்தல் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்திலிருந்து இதுவரை ஐக்கிய இராச்சியத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதோடு, இவ்வாறு தயாரிக்கப்பட்டு வரும் வரைபடங்களின் உரிமை அவர்களிடம் உள்ளமையினால் இந்த வரைபடங்களை விற்பனை செய்வதன் மூலம் அவர்கள் பாரிய வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். இலங்கை கடற்பரப்பின் ஊடாக பயணிக்கும் கப்பல் ஒவ்வொன்றும் நாட்டின் கடற்பரப்பிற்குரிய அச்சு மற்றும் மின்னணு வரைபடங்களை பயன்படுத்த வேண்டுமென்பதோடு, வருடாந்தம் நாட்டின் கடற்பரப்பின் ஊடாக பயணிக்கும் பாரிய எண்ணிக்கையிலான வணிக கப்பல்களை கவனத்திற்கொள்ளும் போது இந்த வரைப்பட தயாரிப்பு பணிகளை இலங்கையே மேற்கொள்வதன் மூலம் பெருமளவு வருமானத்தை நாட்டிற்காக ஈட்டமுடியும்.

பயிற்சிபெற்ற மனிதவளங்கள் உள்ளபோதிலும், கடற்படையின் நீரியல் அளவை பிரிவுக்கு நவீன தொழினுட்பத்துடன்கூடய உபகரணங்கள் இல்லாமை இலங்கையிலேயே நாட்டின் கடற்பிரதேசத்திற்கான வரைபடத்தை தயாரிப்பதில் இடையூறு காணப்படுகின்றது. இதற்கமைவாக, செம்மையானதும் இற்றைப்படுத்தப்பட்டதுமான அளவை செயற்பாடொன்றின் மூலம் நாட்டின் கடற்பிரதேசத்திற்கான அளவை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரைப்படமாக்கும் நோக்கில் நாட்டின் கடல் வரைப்படங்களைத் தயாரிப்பதற்கு தாபிக்கப்பட்டுள்ள ஒரே நிறுவனமான தேசிய நீரகவளமூல ஆராய்ச்சி, அபிவிருத்தி முகவராண்மையில் தாபிக்கப்பட்டுள்ள தேசிய நீரியல் அலுவலகத்திற்கு Multi Beam Echo Sounder ஒன்றை கொள்வனவு செய்வதற்கும் இதன் பொருட்டு திறந்த சருவதேச கேள்வி கோருவதற்குமாக முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது இது தொடர்பில் தற்போதைய கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் தெரிவிக்கப்பட்ட உடன்பாட்டினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.