• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாதம்பிட்டிய, கிம்புலா எலவத்த வீடமைப்பு கருத்திட்டத்தின் மேல் கட்டமைப்பு வேலைகளை வடிவமைத்தல், நிருமாணித்தல், நிதியிடுதல்
- 472 வீட்டு அலகுகளைக் கொண்ட மாதம்பிட்டிய, கிம்புலா எலவத்த குறைந்த வருமானம் பெறும் வீடமைப்பு கருத்திட்டத்தின் மேல் கட்டமைப்பு வேலைகளை வடிவமைத்தல், நிருமாணித்தல், நிதியிடுதல் என்பவற்றுக்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2,247 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s, CML-MTD Construction (Pvt) Ltd. நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.