• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்குத் தேவையான மருந்துகளை கொள்வனவு செய்தல்
- நீரிழிவு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் மருந்தொன்றான Biphasic Isophane இன்சியுலின் தடுப்பூசி 1,350,000 வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 2.55 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் தொகைக்கு டென்மார்க் Novo Nordisk A/S நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.