• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் முதலீட்டு சேவைககளை வழங்குவதற்காக ஒற்றை சாளர முதலீட்டு வசதிகளை வழங்கும் செயலணியொன்றைத் தாபித்தல்
- இலங்கையில் அவர்களுடைய செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ள முதலீட்டாளர்களுக்கு தற்போது அரசாங்கத்தின் பல்வேறுபட்ட நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் சுமார் 14 அங்கீகாரங்களை / உரிமப்பத்திரங்களை பெறவேண்டி உள்ளது. இதற்கு நீண்ட காலம் எடுக்கின்றமை முதலீட்டாளர்களின் ஊக்கத்தை குறைப்பதற்கு காரணமாகும். இதன்போது ஒருங்கிணைப்பு நிறுவனமாக இலங்கை முதலீட்டு சபை செயற்பட்டாலும் ஏனைய உரிய அரசாங்க நிறுவனங்களில் நிலவும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த செயற்பாட்டை வினைத்திறன் மிக்கதாக செய்வதில் இடையூறு நிலவுகின்றது. இதற்கு மாற்று வழியாக உரிய ஒருங்கிணைப்பு உட்பட தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குறுத்தும் வழிமுறையுடன் முதலீட்டாளர்களுக்கு வசதி வழங்கும் ஒற்றை சாளர முதலீட்டு செயலணியொன்றை (Single Window Investment Facilitation Taskforce) தாபிக்கும் பொருட்டு திறமுறை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.