• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தை திருத்துதல்
- எல்லை கடந்த குற்றங்களை தடுத்தல், குற்றங்களை தடுப்பதனை பலப்படுத்தல், குற்றங்களை புலன்விசாரணை செய்தல், குற்றங்களின் மூலம் ஈட்டிய பணத்தொகைகளை அரசுடமையாக்குதல் போன்ற நோக்கங்கள் சார்பிலான ஏற்பாடுகள் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தில் உள்ளன. வௌ்ளைப் பணமாக்கல் பற்றிய தவறினை இனங்காணுதல் இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் 16 ஆம் உறுப்புரையின் மூலம் காட்டப்பட்டுள்ள இலஞ்சம் பெறும் தவறினை குற்றவியல் குற்றமொன்றாக குறிப்பிடும் தேவை, கணனி முறைமை மற்றும் தரவு தொடர்புபட்ட குற்றவியல் குற்றங்கள் போன்ற இந்த துறைக்கு உரியதாக அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ள நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக தயாரிக்கப்பட்டுள்ள திருத்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.