• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகள் (SDG) 14 - நீரில் வாழும் உயிரினங்கள் (Blue SDG) தொடர்பிலான பிராந்திய மாநாட்டினை 2018 யூன் மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துதல்
- ஐக்கிய நாடுகளின் நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளின் கீழ் வறுமை யினை ஒழித்தல் போன்ற குறியிலக்கினை நிறைவு செய்யும் போது பாரிய பங்களிப்பினை வழங்குவதற்கு கடற்றொழில் துறைக்கு இயலுமென இனங் காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக நீரில் வாழும் உயிரினம் அல்லது நீல நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளை அடையும் போது உள்ள சவால் களுக்கு கூட்டாக ஆயத்தமாதலின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, இது தொடர்பிலான பிராந்திய மாநாடொன்றை பிராந்தியத்தின் கடல் சார்ந்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்களிப்புடன் 2018 யூன் மாதம் 21 ஆம் 22 ஆம் திகதிகளில் இலங்கையின் அனுசரணையில் நடாத்துவதற்கும் அதற்காக உறப்படும் செலவினை தழுவுவதற்கு நோர்வே அரசாங்கத்தினால் வழங்கப்படும் 3.48 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகையினை பெற்றுக் கொள்வதற்கும் முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது தற்போதைய கடற்றொழில், நீரகவளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா அவர்களினால் இது சம்பந்தமாக தெரிவித்த உடன்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.