• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு மருந்து உற்பத்தியை மேம்படுத்துவதற்காக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் முதலீட்டாளர்களுடன் கூட்டு தொழில்முயற்சிகளை தாபித்தல்
- இலங்கையில் அரச மருந்தாக்கல் கைத்தொழிலை மேம்படுத்துவதன் மூலம் மருந்து இறக்குமதிக்கு செலவாகும் அந்நியச் செலாவணியை கணிசமான அளவு சேமித்துக் கொள்ளலாம். ஆதலால் உயர் தரம் கொண்ட மருந்துகளை வினைத்திறனுடன் அரசாங்க வைத்திய சாலைகளுக்கு தொடர்ச்சியாக வழங்கும் ஆற்றலுள்ள முதலீட்டாளர்களை இனங்கண்டு இந்த முதலீட்டாளர்களுக்கும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் கூட்டு தொழில் முயற்சிகளை தாபிப்பதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டு தொழில்முயற்சிகளில் இணைவதற்கு அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு சட்டபூர்வமான அனுமதியினை வழங்கும் நோக்கில் 1987 07 04 ஆம் திகதியிடப்பட்டதும் 456/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள 1957 ஆம் ஆண்டின் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட கட்டளைகளை திருத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக் கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.