• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-05-09 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஐக்கிய அமெரிக்க குடியரசின் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான மானிய மற்றும் அமுல்படுத்தல் உடன்படிக்கை
- ஐக்கிய அமெரிக்க குடியரசின் வௌிநாட்டு உதவி முகவர் நிறுவனமொன்றான Millennium Challenge Corporation நிறுவனத்தினால் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்காக எதிர்வரும் ஐந்து வருடக் காலப்பகுதிக்குள் நாட்டின் முக்கிய சில துறைகளை அபிவிருத்தி செய்வதற்காக வழங்கப்படும் 7.4 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியமொன்றை பெற்றுக் கொள்வதற்கும் இதன் பொருட்டு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மானியத்திற்கு மேலதிகமாக 2.6 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட மானியமொன்றை இலங்கைக்கு வழங்குவதற்கும் இந்த நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது. ஆதலால் இந்த மேலதிக மானியத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் இதன் கீழான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில், மொத்த மானிய தொகையை 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களாக திருத்தி அதில் கைச்சாத்திடும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.