• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்காக மூன்று (03) நீண்டகால ஒப்பந்தங்களை கைச்சாத்திடுதல்
அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட விசேட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2018 மார்ச் மாதம் 15 ஆம் திகதியிலிருந்து எட்டு (08) மாத காலத்திற்குத் தேவையான 4,650,000 எரிவாயு எண்ணெய் (டீசல்) பரல்கள், 2,080,000 Jet A-1 எரிவாயு எண்ணெய் பரல்கள் மற்றும் 1,275,000 Gasoline (பெற்றோல்) பரல்கள் என்பவற்றை கொள்வனவு செய்வதற்கென உரிய வழங்குநர்களுடன் மூன்று (03) நீண்டகால ஒப்பந்தங்களை கைச்சாத்திடும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.