• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களத்தின் செயற்றிறனை அதிகரிப்பதற்குத் தேவையான இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல்
அரசாங்க தொழிற்சாலைகள் திணைக்களமானது அரச மற்றும் தனியார் துறைக்கு இயந்திர பொறியியல் சேவைகளை வழங்கும் முன்னோடியான நிறுவனமொன்றாகுமென்பதுடன், விசேடமாக இதன் கனரக கட்டமைப்பு மற்றும் இயந்திர பட்டறையானது நீர்ப்பாசனத் துறைக்கு தேவையான கனரக கட்டமைப்புக்கள் மற்றும் அவசியமான பொறியியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றது. நாட்டின் நீர்ப்பாசன துறையின் அபிவிருத்தியுடன், நீர்ப்பாசன நீர் முகாமைத்துவ மதகு கதவுகளை நிருமாணித்தல், பொருத்துதல் மற்றும் புனரமைத்தலுக்கான கேள்வி அதிகரித்த நிலையில் உள்ளதுடன், இக்கேள்வினை சமாளிப்பதற்கு இப்பட்டறையின் உற்பத்தி இயலளவை மேம்படுத்த வேண்டியுள்ளமை பற்றி இனங்காணப்பட்டுள்ளது.



அதற்கிணங்க, கனரக கட்டமைப்பு இயந்திரப் பிரிவிற்குத் தேவையான, Plano Miller இயந்திரமொன்றையும் கணனி மூலம் இயக்கக் கூடிய கணனிசார்ந்த எண்சார் கட்டுப்பாடு (Computer Numerical Control) இயந்திரமொன்றையும் கொள்வனவு செய்யும் பொருட்டு வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.