• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
7,000,000 பரல்கள் மசகு எண்ணையை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடல்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதன் தொடர்ச்சியான தொழிற்பாடு கருதி தடங்கலற்ற வழங்கலை உறுதிப்படுத்தும் பொருட்டு தவணை ஒப்பந்தங்களின் கீழ் அவசியமான மசகு எண்ணெயினை கொள்வனவு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, 2018 ஏப்ரல் 01 ஆம் திகதியிலிருந்து எட்டு மாத காலத்திற்குத் தேவையான 7,000,000 மேர்பன் மசகு எண்ணை பரல்களை, மசகு எண்ணெய் பரல் ஒன்றுக்கு 1.69 ஐக்கிய அமெரிக்க டொலர் கொண்ட வட்டப் பெறுமதியில் கொள்வனவு செய்வதற்காக M/s. Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd. நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.