• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை கனிம மணல் நிறுவனத்தின் கனிம உற்பத்திகளின் விற்பனை
வரையறுக்கப்பட்ட இலங்கை கனிம மணல் நிறுவனமானது இல்மனைட் (Ilmenite), Rutile, Zircon, Hi Ti Ilmenite போன்ற அதன் பிரதான கனிம உற்பத்திகளை சருவதேச போட்டி விலைமனு நடைமுறைக்கூடாக விற்பனை செய்கின்றது. அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு, தமது கூறுவிலைகளை சமர்ப்பித்துள்ள அதியுச்ச விலைமனுதாரர்களுக்கு வெவ்வேறு வகைப்பட்ட 17,800 மெற்றிக் தொன்கள் கொண்ட கனிம மணலை விற்பனை செய்யும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.