• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்ளல் தொடர்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுதல்
பாகிஸ்தானிலுள்ள மூன்று கமத்தொழில் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இலங்கை கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் 2010 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒத்துழைப்பின் கீழ் நவீன இனப்பெருக்க முறைகளைப் பயன்படுத்தி கரும்பு பயிரை விருத்தி செய்வதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக கரும்பு வகைகளை பரிமாறிக் கொள்தல் உட்பட இளம் கமத்தொழில் விஞ்ஞானிகளை பயிற்றுவித்தல் என்பன மேற்கொள்ளப்பட்டுள்ளன.



இதன் வெற்றியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, நாட்டின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் பாகிஸ்தான், பைசலாபாத் கரும்பு ஆராய்ச்சி அபிவிருத்தி சபை மற்றும் அதன் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் இடையில் கரும்பு இனப்பெருக்க பொருட்களை பரிமாறிக் கொள்ளல் சம்பந்தமாக புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு பிரேரிக்கப் பட்டுள்ளது. இதன் ஊடாக புதிய கரும்பு வகைகளை இலங்கைக்கு பெற்றுக் கொள்வதற்கும் பாகிஸ்தான் கமத்தொழில் விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறும். இதற்கமைவாக, உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கையில் உரிய நிறுவனங்களுக்கு இடையில் கைச்சாத்திடும் பொருட்டு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.