• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்கத்துக்குச் சொந்தமான மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை
அரசாங்கத்தின் சொத்துக்களையும் செலவுகளையும் முகாமிக்கும் நோக்கில் தாபிக்கப்பட்ட தணிக்கையாளர் நாயகத்தின் அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட 2017/01 ஆம் இலக்கமுடைய சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் திரட்டப்பட்ட மாகாண சபைகளுக்குச் சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் மாகாண சபைகளுக்குச் சொந்தமான பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள வாகனங்களை துரிதமாக அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

மாகாண சபைகள் பயன்படுத்துபவை பயன்படுத்தாதவை மொத்த வாகனங்களின் எண்ணிக்கை
1 மத்திய மாகாண சபை 1716 175 1891
2 கிழக்கு மாகாண சபை 1579 423 2002
3 வடமத்திய மாகாண சபை 649 43 692
4 வடமேல் மாகாண சபை 1322 80 1402
5 வட மாகாண சபை 1719 236 1955
6 சப்பிரகமுவ மாகாண சபை 1197 71 1268
7 தென் மாகாண சபை 1600 123 1723
8 ஊவா மாகாண சபை 1009 57 1066
9 மேல் மாகாண சபை 3563 384 3947
மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 14,354 1,592 15,946