• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் பெற்றோலிய அகழ்வு மற்றும் உற்பத்திகளை விரைவுப் படுத்துவதற்கான செயற்பாட்டுத்திட்டம்
உலகளாவிய பெற்றோலிய மற்றும் இயற்கை எரிவாயு அகழ்வு கைத்தொழிலின் எதிர்மறையான வளர்ச்சி போக்குகள் காரணமாக கடந்த மூன்று (03) ஆண்டுகளில் இலங்கையில் பெற்றோலிய அகழ்வுச் செயற்பாடுகளானவை மந்த கதியில் முன்நோக்கி சென்றுகொண்டிருந்தாலும், உள்நாட்டுச் சந்தை தேவைகளை அடைந்து கொள்வதற்கு அதிக உறுதியுடன் இடையறாத விதத்தில் கரைக்கு அப்பாலான அகழ்வுச் செயற்பாடுகளை இலங்கையினால் மேற்கொள்ளக்கூடியதாக இருந்துள்ளது. தற்போது, கண்டறியப்பட்டுள்ள இயற்கை எரிவாயு படிமங்களின் அபிவிருத்தி கருதி சிறிய அளவிலான விலைமனுக்களை கோருவதற்கும் அகழ்வுச் செயற்பாடுகளின் அமுலாக்கம் கருதி முறையான விலைமனுக்களை கோருவதற்கும் கவனத்தை செலுத்தி, விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையை பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி செயலகம் எடுத்துள்ளது.

மன்னார் படுகையில் M2 என அழைக்கப்படும் காணித் துண்டிலிருந்து கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு படிமங்களிலுள்ள மேலதிக படிமங்களை கண்டறிவதற்கான விலைமனுச் சுற்று 2018 ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையின் கிழக்கு கரையோர பகுதியிலும் ஆழம் குறைந்த கடற் பிரதேசத்திலும் பெற்றோலிய அகழ்வுச் செயற்பாடுகள் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கம்பனிகளுடன் உடன்படிக்கை களை கைச்சாத்திடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், இலங்கையின் நிலப் பிரதேசத்தில் பெற்றோலியத்தை அகழ்வதன் மீது கவனத்தை செலுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, இலங்கையில் பெற்றோலிய அகழ்வு மற்றும் உற்பத்திகளை விரைவுப் படுத்துவதற்கான செயற்பாட்டுத்திட்டம் தொடர்பான மேற்போந்த தகவல்கள் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்களினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.