• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கம் அடையக்கூடிய கமத்தொழில் - நீர்ப்பாசன அபிவிருத்தி கருத்திட்டம் (2018 - 2024)
நாட்டின் உலர் மற்றும் இடைப்பட்ட வலயங்களினுள் அமைந்துள்ள சிறிய குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் கால்வாய்களைக் கொண்ட சிறிய நீர்ப்பாசனங்களின் கீழ் சுமார் 470,000 ஏக்கர் வயல்கள் பயிர்ச் செய்கைப்பண்ணப்படுவதோடு, இது நாட்டின் மொத்த வயற்காணியின் அண்ணளவாக 25 சதவீதமாகும். 384,000 விவசாயக் குடும்பங்கள் இதன்மூலம் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேற்கொள்கின்றனர். இந்த வயற்காணிகள் காலநிலை மாற்றங்களினால் இலகுவாக தாக்கத்திற்கு உள்ளாகக்கூடியமையினால், 09 உலர் வலய மாவட்டங்களில் பரந்துள்ள 87 கால்வாய் முறைமைகளின் கீழ் 1,493 சிறிய குளங்கள் காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் புனரமைப்பதற்கு இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த குளங்களின் கீழுள்ள பயிர்ச்செய்கை நிலங்களின் பயனை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு 2018-2024 காலப்பகுதியினுள் உலக வங்கியின் உதவியின் கீழ் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.