• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் களப்பு மற்றும் உள்ளக நீர் நிலைகள் சார்ந்த நீரியல் சூழலை பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தியின் மூலம் நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரித்தல்
நாட்டின் இயற்கையான களப்பு முறைமை, ஆற்றுப்படுகை மற்றும் அதுசார்ந்த பிரதேசங்களில் புற்தரைகள் மற்றும் கமத்தொழில் சார்பில் பயன்படுத்தப்படாத மேலதிக நீருடன் கூடிய ஈரவலயத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உள்ளக நீர் நிலைகளை நிலையான முகாமைத்துவத்துடன் கடற்றொழிலுக்காக பயன்படுத்துவதற்கு உயர் ஆற்றல் நிலவுகின்றது. ஆதலால், இலங்கையில் களப்பு மற்றும் உள்ளக நீர் நிலைகள் சார்ந்த நீரியல் சூழலை பாதுகாத்தல் மற்றும் அபிவிருத்தி உட்பட நீர்வாழ் உயிரின உற்பத்தியை அதிகரிக்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 1,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மீன் உற்பத்தியை அதிகரித்தல், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல், சுற்றுலாத் தொழில் மற்றும் அதுசார்ந்த தொழிலை மேம்படுத்துதல், மீன் உற்பத்திகளின் பதனிடல் உட்பட பெறுமதிசேர்க்கப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என்பன மூலம் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துதல், அந்நிய செலாவணியை அதிகரித்தல் எனபன இந்த கருத்திட்டத்தின் நோக்கங்களாகும். புத்தளம், நயாறு, அருகம்பே, பானம மற்றும் ரக்கவ போன்ற களப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி 18 களப்புகளையும் ஈரவலயத்தில் 300 நன்னீர் குளங்களையும் தழுவும் விதத்தில் இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.