• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை தொடர்பான புதிய தேசிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல்
புதிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை தேசிய கொள்கையொன்றைத் தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சினால் கடற்றொழிலாளர்கள் நீர்வாழ் உயிரின செய்கையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அடங்கலாக உரிய சகல தரப்பினர்களினதும் நிபுணர்களினதும் பொதுமக்களினதும் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு இந்த கொள்கை வரைவானது தயாரிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கையை நிலைபேறாக முகாமித்தல் அதன் பெறுபேற்றினை நியாயமாக பகிர்ந்து செல்தல் என்பவற்றின்பால் இந்த புதிய கொள்கையின் ஊடாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சருவதேச தரங்களுக்கு அமைவாக கடற்றொழிலை மேற்கொள்தல், சட்டவிரோத மீன்பிடித்தலை தடைசெய்தல், பொருத்தமான புதிய தொழினுட்பத்தை அறிமுகப்படுத்தல், மீன் பிடிக்கப்பட்டதன் பின்னரான சேதங்களைத் தவிர்த்தல், தேசிய மீன் பாவனையை அதிகரித்தல், மீன் உற்பத்திகளின் ஏற்றுமதியினை மேம்படுத்தல், கடற்றொழிலாளர்களின் சமூக - பொருளாதார நிலைமையை மேம்படுத்துதல் போன்ற விடய்ஙகளுக்கு இதன் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தேச புதிய கடற்றொழில் மற்றும் நீர் வாழ் உயிரின செய்கை தேசிய கொள்கையினை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.