• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆரம்ப சுகாதார சேவைகளை பலப்படுத்துதல்
இலங்கையில் பிராந்திய மட்டத்தில் தாபிக்கப்பட்டுள்ள சுமார் 970 ஆரம்ப மட்ட வைத்தியசாலைகள் இருந்தபோதிலும் பொதுமக்கள் இந்த மருத்துவசாலை வலையமைப்பை தவிர்த்து மூன்றாம் நிலை சிகிச்சை வழங்கும் வைத்தியசாலைகளுக்கு செல்லும் போக்கு நிலவுகின்றது. இதன் காரணமாக மூன்றாம்நிலைமட்ட சிகிச்சைகளை வழங்கும் வைத்தியசாலைகளில் பளுகூடியுள்ளது. அதேபோன்று முதியோர்களின் தொகை அதிகரித்தல், தொற்றாத நோய்களின் அதிகரிப்பு, மாற்றமடையும் நோய் அறிகுறிகள் போன்றவை காரணமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சிகிச்சை சேவையினை விருத்தி செய்யும் தேவை எழுந்துள்ளது. ஆதலால், நிபுணத்துவ சிகிச்சை சேவைகளை வழங்கும் கிட்டிய ஆரம்ப வைத்தியசாலைகளுடன் கொத்தணி ரீதியில் இணைப்பதன் மூலம் பொது மக்களுக்கு இலகுவாக சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வளர்ச்சியடைந்த சுகாதார சேவை முறைமையொன்றைத் தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள 'உலகளாவிய சுகாதார காப்பு சார்பில் சுகாதார சிகிச்சை சேவைகளை வழங்கும் கொள்கையினை' நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* சனத்தொகையில் 5,000 பேர்களுக்கு குடும்ப வைத்தியர் ஒருவர் வீதம் இனங்கண்டு நோய் சிகிச்சைக்கான வசதிகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சிகிச்சை சேவைகளை வழங்கும் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்.
* குடும்ப மருத்துவ துறைசார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்தல் முதற்தடவையாக சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வருகை தரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளை பலப்படுத்துவதற்குத் தேவையான ஆரம்ப பயிற்சியினை மருத்துவர்களுக்கு வழங்குதல்.
* ஆரம்ப சிகிச்சை வழங்கும் நிறுவனங்களினால் நோயாளிகள் அனைவருக்கும் சிகிச்சை வழங்குவதனை உறுதிப்படுத்துதல், இந்த நோயாளிகளை நிபுணத்துவ மருத்துவர்களுடன் கூடிய இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவசாலைகளுக்கு தக்க நேரத்தில் பொருத்தமானவாறு அனுப்புவதை பலப்படுத்துதல்.
* சகல பிரசைகளுக்கும் அவர்களுக்கே உரிய சுகாதார துறைக்கான அடையாள இலக்கமொன்றுடனான தனி ஆள் சுகாதார அறிக்கையொன்றை வழங்குதல் மற்றும் சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமையை மேலும் பலப்படுத்தல்.
* சுகாதார துறையில் மனிதவளத்தை பயனுள்ளதாக பயன்படுத்துதலும் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துதலும்.
* உரிய கொத்தணியில் ஆரம்ப சிகிச்சை சேவைகளை வழங்கும் மருத்துவர்களுடன் இணைந்து அவர்களுடைய சிகிச்சை ஆற்றலை மேம்படுத்திக் கொள்வதற்கு நிபுணத்துவ மருத்துவர்கள் மூலம் தூரத்திலிருந்தே உதவும் முறையொன்றைத் தாபித்தல்.