• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வலுவாதார அபிவிருத்திசார் குறிக்கோள்களை முதன்மைப்படுத்தல்
2030 ஆம் ஆண்டளவில் வலுவாதார அபிவிருத்திசார் குறிக்கோள்களை (Sustainable Development Goals - SDGs) அடைவது தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டில் இலங்கை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2017 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலங்கை நிலைபேறுடைய அபிவிருத்தி சட்டமானது 2017 10 03 ஆம் திகதியிலிருந்து அமுலிலுள்ளது. இதற்கமைவாக, இந்த நிலைபேறுடைய அபிவிருத்தி இலக்குகளை அடையும் போது அரசாங்க நிறுவனங்களினால் பின்பற்றவேண்டிய தேசிய திறமுறைகளை தங்களது நிறுவன திட்டங்களில் சேர்த்துக் கொள்ளுமாறு சகல அரசாங்க நிறுவனங்களிடம் கோரிக்கை விடுப்பதற்கு வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.