• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் வசதிகளை மேம்படுத்துதல்
நாட்டின் சுகாதார சேவை வழங்குகையை விருத்தி செய்யும் நோக்கில் தற்போது இனங்காணப்பட்டுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான கட்டடங்களை நிருமாணிக்கும் இந்த வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்கும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. முன்னர் திட்டமிடப்பட்டிருந்தவாறு இதன் பொருட்டு சீனாவின் ஏற்றுமதி, இறக்குமதி வங்கியிடமிருந்து (EXIM Bank of China) கடன் உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு இயலாமற் போயுள்ளது.

ஆயினும், இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இதன் மொத்த கருத்திட்ட செலவிலிருந்து 85 சதவீதமாகிய 72.25 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையினை ஹொங்கொங்கிலுள்ள ஹொங்கொங் மற்றும் ஸங்ஹாய் வங்கி கோப்பரேஸன் லிமிட்டெட் (HSBC) நிறுவனத்திடமிருந்தும் மீதி 15 சதவீதமாகிய 12.75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகையினை மக்கள் வங்கியிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடன் உடன்படிக்கைகளைச் செய்து கொள்வதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.