• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உண்மைக்குப் புறம்பான மற்றும் அவதூறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துதல்
சமூக ஊடக வலையமைப்புகளிலும் பல்வேறுபட்ட இணையத்தளங்கள் அடங்கலாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் உண்மைக்குப் புறம்பான தகவல்களை பரப்பும் அத்துடன் அவதூறான தகவல்களை வெளியிடும் ஆட்களுக்கு எதிராக நடைமுறையிலுள்ள சட்டக்கட்டமைப்பிற்குள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அமைச்சரவைக்குச் சிபாரிசுகளை சமர்ப்பிக்குமாறு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சு, தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டு தொழில் வாய்ப்பு அமைச்சு மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குறுத்துகை ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.