• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் முகத்துவாரம் மற்றும் டொரிங்டன் பிரதேசங்களில் மழைநீர் வடிகால் சுரங்க வழிகளை நிருமாணித்தல்
கொழும்பு தலைநகரம் சார்ந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் வௌ்ளப்பெருக்கு கட்டுப்பாடு சார்பில் புதிய முகத்துவாரம் மற்றும் டொரிங்டன் சுரங்க வழிகளை நிருமாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s China Petroleum Pipeline Engineering Co. Ltd கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.