• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
களனியவிலிருந்து அறுவக்காலு வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்வதற்காக புகையிரத என்ஜின்களை (Locomotive Engines) கொள்வனவு செய்தல்
கொழும்பு தலைநகர வலய நகர பிரதேசத்திற்குள் ஒன்றுசேரும் திணமக்கழிவுகளை புத்தளம், அறுவக்காலு பிரதேசத்தில் நிருமாணிக்கப்படும் கழிவு இடப்படும் பிரதேசமொன்றில் இடும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் களனிய இடமாற்றல் நிலையத்திலிருந்து அறுவக்காலு பிரதேசம் வரை திண்மக்கழிவுகளை கொண்டு செல்லும் பொருட்டு 04 புகையிரத என்ஜின்களையும் கொள்கலன் பெட்டிகளையும் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. இதன் பொருட்டு புதிய பெறுகை செயற்பாட்டின் கீழ் புகையிரத என்ஜின்களை பெற்றுக் கொள்ளும் போது மிக நீண்டகாலம் எடுக்கும். ஆதலால் இந்த கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திணைக்களத்துக்கான புகையிரத என்ஜின்களைப் பெற்றுக் கொள்ளும் பெறுகை செயற்பாட்டின் கீழேயே இந்த நோக்கத்திற்கான 04 புகையிரத என்ஜின்களையும் பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க றணவக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.