• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்துதல்
இலங்கையில் மொத்த தேயிலை தோட்டங்களின் சுமார் 64 சதவீதம் சிறிய தேயிலைத் தோட்டங்களாவதோடு, நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியின் 76 சதவீதத்திற்கு மேலான பங்களிப்பினை இது வழங்குகின்றது. சிறிய தேயிலை தோட்டத்துறையினை மேலும் அபிவிருத்தி செய்யும் திறமுறையொன்றாக சிறிய தேயிலை தோட்டங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் பொருட்டு 2018 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் 250 மில்லியன் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் தேயிலைச் செய்கைகளுக்கு வினைத்திறனுடன் பசளையிடும் பொருட்டு நவீன இயந்திர சாதனங்களை அறிமுகப்படுத்துதல் சரியான கமத்தொழில் முறைகள் பின்பற்றப்படுவதனை ஊக்குவிப்பதற்குத் தேவையான உபகரணங்களை வழங்குதல், தரம்மிக்க கொழுந்து தேயிலை விற்பனைக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் பொருட்டு கிராமிய நுழைவுப் பாதைகளைப் புனரமைத்தல் போன்ற 03 பிரதான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தேயிலை செய்கை பண்ணப்படும் பிரதேசங்களில் 1,456 சிறிய தேயிலை தோட்ட அபிவிருத்தி சங்கங்களுக்கு பசளையிடும் இயந்திரமொன்று வீதம் வழங்குவதற்கும் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு தூவு இயந்திரம், கத்தரிக்கும் கத்தி, முள்ளு போன்ற பயிர்ச்செய்கைக்கான கருவிகளை வழங்குவதற்கும் கிராமிய நுழைவுப்பாதைகளை போக்குவரத்துக்கு ஏற்ற விதத்தில் புனரமைப்பதற்குமாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவின் திஸாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.