• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்
2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபையானது தாபிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை மற்றும் வர்த்தகம் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை உருவாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு சிறந்த பாதுகாப்பினை வழங்குவதும் அநீதியான வர்த்தக கொள்கைகள், வர்த்தக தடைகள் போன்றவற்றிலிருந்து வர்த்தகர்களையும் உற்பத்தியாளர்களையும் பாதுகாத்துக் கொள்வது இதன் அடிப்படை நோக்கமாகும். இதன் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 2003 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடந்த 15 ஆண்டு காலப்பகுதிக்குள் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளைத் தவிர்த்து அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நுகர்வோரையும் வர்த்தக போட்டியையும் பாதுகாப்பதற்கு நிலவும் சட்டங்களுக்கும் புதிய உலகளாவிய வர்த்தக ஆக்கக்கூறுகளுக்கும் அமைவாக நுகர்வோர் அலுவல்கள் பற்றிய அதிகாரசபை சட்டத்தை திருத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.