• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்துதல்
இலங்கையில் முதலீட்டுப் பணிகளை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில் இலங்கையில் வியாபார நடவடிக்கைகள் பற்றிய சுட்டெண்ணை உயர் மட்டத்தில் பேணும் பொருட்டு 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்திற்கு திருத்தங்கள் செய்யவேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, உரிய கம்பனியின் சில விபரங்களை வழங்கி புதிய கம்பனியொன்றை கூட்டிணைப்பது தொடர்பில் பொது மக்களுக்கு அறிவிப்பதற்கு கம்பனிகள் பதிவாளருக்கு சந்தர்ப்பத்தினை வழங்குதல், குறித்த கம்பனியை கூட்டிணைப்பது தொடர்பில் பகிரங்க அறிவித்தலொன்றினை செய்யும் தேவையினை நீக்குதல் மற்றும் ஏதேனும் கம்பனியொன்றின் பெயரொன்றை மாற்றுவதற்கு குறித்த கம்பனிக்கு கட்டளையிடுவதற்கு கம்பனிகள் பதிவாளருக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் விதத்தில் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 5 ஆம் 9 ஆம் 10 ஆம் பிரிவுகளை திருத்தும் பொருட்டு கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.