• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்தல்
அரசாங்க நிறுவனங்களின் பாவனைக்குத் தேவையான வாகனங்களை கொள்வனவு செய்தல் அதேபோன்று தொழிற்பாட்டு தவணை மற்றும் நிதி தவணை போன்ற வழிகளின் கீழ் பெற்றுக் கொள்தல் போன்றவற்றிற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, குறித்த ஒவ்வொரு வழிமுறையின் கீழும் வாகனங்களை கொள்வனவு செய்யும் போதும் பெற்றுக் கொள்ளும் போதும் பின்பற்றப்பட வேண்டிய தகவு திறன்களை உள்ளடக்கி சுற்றறிக்கை அறிவுறுத்தல்களை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.