• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க துறையின் வினைத்திறன் மேம்பாட்டுக் கருத்திட்டம்
அரசாங்க நிதி முகாமைத்துவம் சம்பந்தமாக செயலாற்றும் அரசாங்க நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும் அவற்றின் ஆற்றலை விருத்தி செய்வதற்குமாக முறையே 60 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட கடன் வசதியொன்றையும் 10 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மானியமொன்றையும் வழங்குவதற்கு உலக வங்கியும் ஐரோப்பிய ஒன்றியமும் உடன்பாடு தெரிவித்துள்ளன. இந்த நிதியத்தைப் பயன்படுத்தி அரசாங்க துறையின் வினைத்திறனை மேம்படுத்தும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதோடு, இதன் மூலம் அரசாங்க முதலீடு மற்றும் கடன் முகாமைத்துவத்தின் வினைத்திறனை மேம்படுத்துதல், வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகளின் நடைமுறைப்படுத்தலினதும் கொள்வனவு செயற்பாட்டினதும் தொழிற்பாட்டு வினைத்திறனை விருத்தி செய்தல், அரசாங்க சேவைகளை வழங்கும் போது அதன் கட்டுப்பாடு, வௌிப்படைத் தன்மை மற்றும் வினைத்திறனை மேம்படுத்துதல், அரசாங்கத்துறையின் நிலைபேறுடைய தேர்ச்சி மற்றும் ஆற்றலை மேம்படுத்துதல் மற்றும் மக்களின் பங்களிப்பினை அதிகரித்தல் போன்ற துறைகளின்பால் கவனம் செலுத்தப்படும். மேற்போந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வசதிகளை வழங்கும் பொருட்டு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.