• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பேருவளை, பதனாகொட பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் மற்றும் சனசமூக நிலையம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக காணித் துண்டொன்றை குறித்தொதுக்கிக் கொள்ளல்
பேருவளை மற்றும் தொடங்கொடை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குச் சொந்தமான பதனாகொட, கல்பொத்தவில மற்றும் புன்சலமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக விளையாட்டு மைதானம் மற்றும் சனசமூக நிலையம் என்பவற்றை நிருமாணிப்பதற்காக நமுனுகுல அரசாங்க பெருந்தோட்ட கம்பனியினால் நிருவகிக்கப்படும் பல்லேகொடவத்த என்னும் காணியிலிருந்து 127.6 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்றை அரசாங்கத்திற்கு உடைமையாக்கிக் கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் (மருத்துவர்) ராஜித சேனாரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.