• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வங்காளவிரிகுடா சார்ந்த பிராந்திய நாடுகளுக்கிடையில் விஞ்ஞான மற்றும் தொழினுட்ப ஒத்துழைப்பினை மேம்படுத்திக் கொள்ளல்
2008 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடாத்தப்பட்ட வங்காளவிரிகுடா சார்ந்த பிராந்திய துறை, தொழினுட்ப ஒத்துழைப்பு முன் முயற்சியின் இரண்டாவது மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளுக்கு தொழினுட்ப மாற்றீடு வசதிகளை இலங்கையில் தாபிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இதன் மூலம் உறுப்பு நாடுகளுக்கிடையே உயிரியல் தொழினுட்பம், நனோ தொழினுட்பம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழினுட்பம், செய்மதி தொழினுட்பம் போன்ற துறைகளின் அனுபவங்களை பரிமாறிக் கொள்ளும் மற்றும் திறன்கள் அபிவிருத்தி பற்றிய ஒத்துழைப்பினை உருவாக்கிக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள அமைப்பு புறவிதிகளில் கைச்சாத்திடுவதற்கும் இதற்குத் தேவையான நிதியங்களைப் பெற்றுக் கொள்வதற்குமாக விஞ்ஞான, தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.