• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச் சட்டத்தையும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டத்தையும் திருத்துதல்
மகப்பேற்றின் போது பெண் ஊழியர் ஒருவருக்கு மகப்பேற்று நன்மைகளுக்கு உரியதாக 1939 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்திலும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் (சேவை மற்றும் ஊதியம் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டத்திலும் உள்ள ஏற்பாடுகளில் காணப்படும் வேறுபாடுகளை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்த நோக்கத்திற்காக சட்டவரைநரினால் வரையப்பட்டுள்ள திருத்த சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்திற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுவ அபிவிருத்தி அமைச்சர் டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.