• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் மத்திய வங்கி தொடர்பான சட்டங்களுக்கு முன்மொழியப்படும் திருத்தங்கள்
இலங்கை மத்திய வங்கியின் நிருவாக பணிகளை சிறந்த முறையில் ஒழுங்குமுறைப்படுத்தி அதன் சுயாதீன தன்மையை உறுதிப்படுத்தும் விதத்தில் இலங்கையின் மத்திய வங்கியை தாபிப்பதற்குரியதான நிதி சட்டத்தையும் தொடர்புபட்ட ஏனைய சட்டங்களையும் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையில் பெறுமதியின் நிலையான தன்மையை பேணுவதனை உறுதிப்படுத்துவதற்கான நிதிக் கொள்கை கட்டமைப்பொன்றாக நெகிழ்ச்சிகரமான பணவீக்க குறியிலக்கு கட்டமைப்பொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு வசதிகளை செய்வதற்கும் நிதித் துறையின் மேற்பார்வை செயற்பாட்டினை பலம் மிக்கதாக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கியின் செயற்பாட்டுடன் தொடர்புபட்ட சட்டங்களை இற்றைப்படுத்தும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.