• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-04-03 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான சட்டத்தை திருத்துதல் (விடய இல.08)
இரசாயன ஆயுதங்களை விருத்தி செய்தல், உற்பத்தி செய்தல், திரட்டுதல், பயன்படுத்துதல் என்பவற்றை தடைசெய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பிலான சமவாயத்திலுள்ள ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான சட்டமானது ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக அதனை நடைமுறைப்படுத் துவதற்குரியதாக விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக குறிப்பிடப் பட்டுள்ளது கைத்தொழில் என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரையாகும். இரசாயன ஆயுத சமவாயம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நேரடியாக ஏற்புடையதாகின்றமையினால் இந்த சட்டத்தில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராக பாதுகாப்பு அமைச்சரை உள்வாங்கி 2007 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க இரசாயன ஆயுதங்கள் சமவாயம் தொடர்பான சட்டத்தை திருத்துவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.