• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 வெசக் வாரத்துக்கு ஒருங்கிணைவாக வரும் மே தின கொண்டாட்ட செயற்பாடுகளை வேறு திகதியொன்றில் நடாத்துதல்
- 2018 ஆம் ஆண்டில் வெசக் பௌர்ணமி தினமானது ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று வருகின்றதோடு, அதனை உடனடுத்து வரும் வாரமானது 'வெசக் வாரமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதோடு, இதனோடிணைந்த மூன்று மேன்மை மிக்க நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக நாடு முழுவதும் பல்வேறுபட்ட சமய நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை வெசக் வாரத்தினுள் மே மாதம் 01 ஆம் திகதியன்று சருவதேச தொழிலாளர் தினமும் வருகின்றமையினால் வெசக் வாரத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு பொதுமக்கள் இடையூறின்றி கலந்து கொள்வதற்கு இயலுமாகும் வகையில் மே தின கொண்டாட்ட விழாக்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்துவதற்கு பொருத்தமான வேறு வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ளுமாறு மூன்று நிக்காயாக்களினதும் அதிவணக்கத்துக்குரிய மஹநாயக்க தேரோக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, மே தினத்தன்று நடாத்தப்படும் விழாக்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் மே மாதம் 07 ஆம் திகதியன்று நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொழிற் சங்கங்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுக்கப்படும். இதன் பொருட்டு மே மாதம் 01 ஆம் திகதியன்று வௌிப்படுத்தியுள்ள லீவு தினத்தினை இரத்துச் செய்து, மே மாதம் 07 ஆம் திகதியை லீவு தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.