• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 1981 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவன சட்டமும் 1988 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பயிற்சி நிறுவனம், 1990 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவனம், 2007 ஆம் ஆண்டின் 50 ஆம் இலக்க ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பயிற்சி நிறுவனம் ஆகிய திருத்தப்பட்ட சட்டங்களின் மூலம் தாபிக்கப்பட்ட ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல அரச பாதுகாப்பு பல்கலைக்கழகமானது கல்வி மற்றும் தொழில்சார் ரீதியில் முழுமையான உத்தியோகத்தர்களை இலங்கையின் முற்படைகளிலும் ஈடுபடுத்துவதற்குத் தேவையான உயர் கல்வியையும் பயிற்சியையும் வெற்றிகரமாக வழங்கி தற்போது உள்ளூர் மாணவர்களுக்கும் வௌிநாட்டவர்களுக்கும் பயிற்சிகளை வழங்கும் பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றாக செயலாற்றுகின்றது. இந்த பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழமொன்றாக அதன் பணிகளையும் நோக்கங்களையும் மேம்படுத்துவதற்காக மேற்போந்த சட்டங்களை நீக்கி ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் என்னும் பெயரில் புதிய சட்டமொன்றை மீளத் தாபிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.