• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறு போகத்திலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் உர மானியக் கொள்கையைத் திருத்துதல்
- விவசாயிகளுக்கு உரமாக வழங்கப்பட்ட உர மானிய நிகழ்ச்சித்திட்டமானது 2016 ஆம் ஆண்டிற்கான சிறு போகத்திலிருந்து நிதியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதோடு, இது 2016 சிறு போகத்திலிருந்து தொடர்ச்சியாக இதுவரை 4 போகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நெற்செய்கைக்காக இரண்டு ஹெக்டெயார்கள் சார்பில் ஒரு போத்திற்கு 25,000/- ரூபாவும் கிழங்கு, வெங்காயம், மிளகாய், சோளம், சோயா அவரை போன்ற தெரிவு செய்யப்பட்ட ஏனைய பயிர்களுக்காக ஹெக்டெயார் ஒன்றுக்கு ஆண்டொன்றில் 10,000/- ரூபாவும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உரம் கொள்வனவு செய்வதற்காக நிதி வழங்கும் கொள்கையினை மீளாய்வு செய்யும் போது எழுந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த நிதி வழங்கும் வழிமுறைக்குப் பதிலாக சகல பயிர்ச் செய்கைகளையும் தழுவும் விதத்தில் விவசாயிகளுக்குத் தேவையான யூரியா, T.S.P, M.O.P., அமோனியா சல்பேட் ஆகிய நேரடியாக பயன்படுத்தும் உரங்கள் அந்தந்த பயிர்ச் செய்கைகளுக்கு இடப்பட வேண்டிய சிபாரிசினை அடிப்படையாகக் கொண்டு திறந்த சந்தையில் விதித்துரைக்கப்பட்ட மானிய விலைக்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, நெல் செய்கை பண்ணும் விவசாயிகளுக்கு போகமொன்றில் 5 ஏக்கர் உச்சத்தின் கீழ் தேவைப்படும் யூரியா, T.S.P, M.O.P. போன்ற நேரடியாக பயன்படுத்தும் உரம் 50 கிலோகிராம் பையொன்று 500/- ரூபா மானிய விலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வழங்குவதற்கும் ஏனைய பயிர்ச் செய்கைகளுக்காக விவசாயிகளுக்கு தேவைப்படும் உரம் 50 கிலோகிராம் பையொன்று 1,500/- ரூபா மானிய விலையில் திறந்த சந்தையில் கொள்வனவு செய்வதற்கும் இயலுமான வழிமுறையொன்றை தயாரிப்பதற்கு 2018 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளவாறு, நெல், கிழங்கு, சோளம், சோயாஅவரை மற்றும் வெங்காய செய்கைகளுக்கு இயற்கை காரணங்களினால் ஏற்படும் சேதங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 40,000/- ரூபா நட்டஈட்டினை வழங்கும் காப்புறுதி திட்டமொன்றை விவசாயி ஒருவர் சார்பில் போகமொன்றுக்கான 675/- ரூபாவைக் கொண்ட பங்களிப்புத் தொகையை அரசாங்கத்தினால் ஏற்பதற்கும் இந்த பிரேரிப்புகளை 2018 சிறு போகத்திலிருந்து அமுல்படுத்தும் பொருட்டும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.