• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கிராமிய பாலங்கள் கருத்திட்டத்திற்கு மேலதிக நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொள்ளல்
- கிராமிய பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்கும் மாகாணங்களுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வு என்பவற்றை குறைப்பதற்கும் அண்ணளவாக 4,000 பாலங்கள் நிருமாணிக்க வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளதோடு, இவற்றுள் 1,210 பாலங்களை நிருமாணிப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பாலங்களை நிருமாணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் தற்போது 1,000 பாலங்களுக்கு மேற்பட்ட அதிகமானவற்றின் நிர்மாணிப்பு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் சுமார் 200 இன் வேலைகள் முடிக்கப்படவுள்ளன.

பாலங்களை துரிதமாக நிருமாணித்து கிராமிய பிரதேசங்களுக்கிடையிலான தொடர்புகளை விருத்தி செய்யுமாறு பல்வேறு மாகாணங்களிலிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலனை செய்து மேலும் 250 பாலங்களை நிருமாணிப்பதற்குத் தேவையான மேலதிக நிதியங்களை ஆரம்ப கருத்திட்டத்திற்காக நிதி வழங்கிய நிறுவனத்தின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக உரிய கடன் உடன்படிக்கைகளின் கால எல்லைகளை நீடிக்கும் பொருட்டு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினாலும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.