• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தின் நிருமாணம்
- பசுமை சக்தி அபிவிருத்தி மற்றும் சக்தி வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 30.2 மெகாவொட் கொள்ளளவுடன் மொரகொல்ல நீர் மின் உற்பத்தி நிலையத்தை நிருமாணிப்பதற்கான கொள்வனவு பணிகள் 03 கட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் சிவில் வேலைகளுக்கான ஆரம்ப வேலைகளின் கீழ் பாதைகளை செப்பனிடுதல், அலுவலகங்களை நிருமாணித்தல், நீர்ப்பாசன முறைமை மற்றும் ஊழியர்களுக்கான வீடுகளை நிருமாணித்தல் போன்றன செய்யப்படவுள்ளதோடு, இதற்காக 5.21 மில்லியன் ஐக்கிய அமரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கொள்வனவுக்காக செய்யப்பட்ட கேள்வி கோரலுக்கு அமைவாக கிடைக்கப்பெற்றிருந்த 07 கேள்விகளிலிருந்து கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினாலும் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினாலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த கேள்வியினை முன்வைத்துள்ள வீ.வீ கருணாரத்ன கம்பனிக்கு 1,109.4 மில்லியன் ரூபா (வரியற்ற) கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.