• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை மின்சார சபையினால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான தற்போதைய ஒப்பந்தங் களின் காலங்களை நீடித்தல்
- இலங்கை மின்சார சபை யிடமுள்ள மொத்த மின்சார ஆற்றலானது 4,086 மெகாவொட்களாகும். இதில் சுமார் 1,391 மெகாவொட் கொண்ட நீர்மின் நிலையங்களின் ஊடான மின்சார உற்பத்தியானது கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் நிலவிய வரட்சியான கால நிலைமையினால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நிருமாணிக்கப்பட்டுவரும் சகல மின் நிலையங்களும் 2019-2022 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் பூர்த்தி செய்யப்படவுள்ளதனால் 2020 ஆம் ஆண்டுவரை மின்சாரம் பெற்றுக் கொள்வதற்கு தற்காலிக வேலைத்திட்டமொன்றைச் செய்யும் தேவை எழுந்துள்ளது. இதற்கமைவாக, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப்பேச்சுக் குழுவின் சிபாரிசினையும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, வரையறுக்கப்பட்ட Ace Power கம்பனிக்குச் சொந்தமான மாத்தறை, எம்பிலிபிட்டிய, சப்புகஸ்கந்த மின் நிலையங்களிலிருந்து தொடர்ந்தும் மின்சாரத்தினை கொள்வனவு செய்வதற்கு இயலுமாகும் வகையில் இந்த கம்பனியுடன் செய்து கொள்ளப்பட்டுள்ளதும் 2018 ஆம் ஆண்டில் முடிவடையவுள்ளதுமான ஒப்பந்தங்களின் காலத்தை மேலும் 03 வருடங்களுக்கு நீடிக்கும் பொருட்டு மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.