• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாண நகரங்களுக்கு சுகாதாரம் மற்றும் துப்புரவேற்பாட்டு கருத்திட்டங்கள் - வடிவமைத்தல் மற்றும் மேற்பார்வை மதியுரைச் சேவை
- அபிவிருத்திக்கான பிரான்ஸ் முகவராண்மையினதும் இலங்கை அரசாங்கத்தினதும் நிதியங்களின் கீழ் நாட்டின் மேல் மற்றும் தெற்கு மாகாண நகரங்களுக்கான சுகாதார மற்றும் துப்புரவேற்பாட்டு கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படும். நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் பாரியளவிலான வடிகால் முறைமைகளின் முகாமைத்துவ ஆற்றலை விருத்தி செய்தலும் நீர்கொழும்பு, காலி - உணவட்டுன மற்றும் களனிய - பேலியகொடை வடிகால் முறைமைகளை நடைமுறைப்படுத்தலும் இந்த கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை மதியுரைச் சேவைகளை வழங்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் M/s Cabinet D'ETUDES MARC MERLIN கம்பனிக்கும் SWECO Denmark A/S Green Tech Consultants (Pvt) Ltd. கம்பனிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள கூட்டு தொழில்முயற்சிக்கு கையளிக்கும் பொருட்டு நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.