• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊவா மாகாணத்தில் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 557.31 கிலோ மீற்றர்களும் மொனராகலை மாவட்டத்தில் 488.78 கிலோ மீற்றர்களும் நீளமான கிராமிய வீதி மேம்படுத்தல் மற்றும் பராமரிப்பு 15 ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் கையளிக்கும் பொருட்டு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹஷிம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.