• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் நெபடகஹவத்தயிலிருந்து மஹகித்துல வரையான நீர்த்தேக்க நுழைவு சுரங்கம் வரை பிரதான கால்வாயின் நிருமாணிப்பு
- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் வடமேல் மாகாண கால்வாய் கருத்திட்டத்தின் நெபடகஹவத்தயிலிருந்து மஹகித்துல வரையான நீர்த்தேக்க நுழைவு சுரங்கம் வரை பிரதான கால்வாயினை நிருமாணிக்கும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் 5,505.28 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு China State Construction Engineering Corporation Ltd, நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.