• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கெதிரான சமவாயத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்து பாவனைக்கெதிரான சமவாயத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்ட 2017 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க ஊக்கமருந்து (தடைசெய்யப்பட்ட பட்டியல்) ஒழுங்கு விதியானது உள்ளடக்கப்பட்டு வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேக்கர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.