• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரதேச மட்டத்தில் சிறிய அளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- புதிய தேர்தல் முறைக்கு அமைவாக நடாத்தப்பட்ட உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தலுக்கு அமைவாக உள்ளூராட்சி அதிகாரசபைகளின் ஒவ்வொரு தொகுதிக்கும் மக்கள் பிரதியொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமையினால் அவர் பிரதிநிதித்துவப் படுத்தும் தொகுதிக்குரிய உட்கட்டமைப்பு வசதிகளின் தேவைகளை கண்டறியும் போது குறித்த பிரதிநிதிக்கும் வாய்ப்பு வழங்குவது முக்கியமானதாகும். இவ்வாறு கண்டறியப்படும் பிரேரிப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி குறித்த பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்தும் போது எழக்கூடிய பிரச்சினைகள் மற்றும் இரட்டிப்பாவதை தடுத்தல் என்பவற்றுக்கு பொருத்தமான வழிமுறையொன்றை தயாரிப்பதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.