• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- க.பொ.த (உயர் தர) பரீட்சைக்கு தொழினுட்ப பாடவிதானம் 2013 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டதோடு, அதன் முதலாம் கட்டத்தில் 251 பாடசாலைகளில் இந்த பாடவிதானத்தை கற்பிப்பதற்கு ஆரம்பிக்கப்பட்டது. தொழினுட்ப விடயத்தினை கற்பதற்கான வாய்ப்பினை மேலும் அதிகரிக்கும் நோக்கில் 2019 ஆம் ஆண்டளவில் 1,500 பாடசாலைகளில் தொழினுட்ப பாட விதானத்தை அறிமுகப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பாடவிதானம் செய்முறை செயற்பாடுகளுக்கு உட்பட்ட விடயமொன்றாகையினால், இந்த பாடவிதானத்தினை கற்பிக்கும் பாடசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழினுட்பத்துடன் கூடிய உபகரணங்களை வழங்குதல், இந்த பாடங்களை கற்பிப்பதற்கு ஆசிரயர்களை பயிற்றுவித்தல் என்பன அத்தியாவசியமாக நடைபெற செய்யப்படுத்தப்படல் வேண்டும். இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடைமுறைப்படுத்தப்படவுள்ள உத்தேச "தொழினுட்ப கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்" சருவதேச அபிவிருத்திக்கான ஒபெக் நிதியத்தின் ஒத்தாசையுடன் நடைமுறைப்படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.