• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொதுக்கல்வி நவீனமயப்படுத்தல் கருத்திட்டம் (உலக வங்கி உதவியின் கீழ்)
- உலகமயப்படுத்தல் மற்றும் தொழினுட்பத்தின் துரித வளர்ச்சியுடன் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்குத் தேவையானவாறு நாடொன்றின் மனிதவளத்தினை உருவாக்கும் அத்திவாரமாக பொதுக்கல்வி இனங்காணப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இலங்கையின் எதிர்கால தேவைகளுக்கு ஏற்றவாறு பொதுக் கல்வியை நவீனமயப்படுத்தல் மற்றும் அதன் தரத்தினை மேம்படுத்துதல் சார்பில் பொதுக் கல்வி நவீனமயப்படுத்தல் கருத்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்கு 100 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட சலுகை கடனொன்றை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது. தற்போதைய தொழிற்சந்தை தேவைகளுக்கு ஏற்றவாறு திறமை மற்றும் பயிற்சி பெற்ற மனித மூலதனமொன்றை அபிவிருத்தி செய்துகொள்ளும் நோக்கில் உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்தும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.