• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையை மீளமைத்தல்
- மக்களிடையே நூல்களை வாசிக்கும் மற்றும் பயன்படுத்தும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும் அதற்கு ஒத்தாசை நல்குவதற்கும் நூல்களை எழுதுதல், பதிப்பித்தல் போன்ற பணிகள் சம்பந்தமாக தேசிய கொள்கையொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்குமான நோக்கங்களை அடைவதற்காக யுனெஸ்கோ நிறுவனத்தின் சிபாரிசின் மீது 1972 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபை 2012 ஆம் ஆண்டில் இல்லா தொழிக்கப்பட்டு அதன் பணிகள் தேசிய நூலக, ஆவண சேவைச் சபையின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆயினும், இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையினால் நிறைவேற்றப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் மற்றும் பணிகளை மிக பயனுள்ள வகையில் நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு அதற்காகவே குறித்தொதுக்கப்பட்ட நிறுவனமொன்று இருக்கும் தேவையினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2012 ஆம் ஆண்டில் இல்லாதொழிக்கப்பட்ட இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையை மீண்டும் தாபிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.