• Increase font size
  • Default font size
  • Decrease font size

2018-03-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்ணியம் மற்றும் சமுதாய ஒற்றுமையை பாதுகாக்கும் சட்டமூலம்
- கண்ணியம் மற்றும் சமுதாய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொது மக்களிடையே அமைதியின்மை, மத மற்றும் சமூக ரீதியில் விரிசல்களை ஏற்படுத்துவதற்கு செய்யப்பட்டுவரும் இரகசிய முயற்சிகள் அதேபோன்று இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக செய்யப்படும் வெறுப்பூட்டல், பழிவாங்கல், விருப்பப்படி நடக்க செய்வித்தல் அச்சுறுத்தல் போன்ற செயல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தற்போது அத்தியாவசிய விடயமொன்றாக மாறியுள்ளது.

இதற்கமைவாக, ஆட்கள் ஒவ்வொருவரினதும் அந்தரங்கத்தன்மையை மீறும் அத்துடன் பொதுமக்களுக்கிடையே மத, இன அல்லது சமூக ஒற்றுமையின் மையை உருவாக்குவதற்கு எடுக்கும் முயற்சிகள் குற்றங்களாகக் கருதி நட வடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் சட்டங்களை வரையும் பொருட்டு நீதி அமைச்சர் (திருமதி) தலதா அத்துகோரல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.